🛒 Cart 0உங்கள் தகவல்கள்
ஆர்டருக்காகப் பெறப்படும் விவரங்கள்
ஆர்டர் பதிவு செய்யும்போது உங்கள் பெயர், cell number, WhatsApp number மற்றும் விநியோக முகவரி பெறப்படுகின்றன. Customer email address கேட்கப்படுவதில்லை; இந்த website-ல் payment அல்லது card விவரங்கள் பெறப்படுவதில்லை.
தகவல்கள் பயன்படுத்தப்படும் விதம்
உங்கள் ஆர்டரைச் சரிபார்க்கவும், உங்களைத் தொடர்புகொள்ளவும், பொருட்களை அனுப்ப ஏற்பாடு செய்யவும் இந்த விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனுப்புவதற்குத் தேவையான பெயர், தொடர்பு எண் மற்றும் முகவரி விவரங்கள் விநியோக சேவையுடன் பகிரப்படலாம்.
Order PDF மற்றும் email
உங்கள் ஆர்டர் விவரங்களும் PDF-மும் website-ல் சேமிக்கப்படுகின்றன. Order notification கடை நிர்வாகிக்கு மட்டும் email மூலம் அனுப்பப்படும். Customer-க்கு email அனுப்பப்படுவதில்லை. Order முடிந்ததும் உங்கள் PDF-ஐப் பதிவிறக்கிக்கொள்ளலாம். PDF download link-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்; அந்த link உள்ளவர் ஆர்டர் விவரங்களைப் பார்க்க முடியும்.
Website வருகை எண்ணிக்கை
Website-க்கு வரும் தனித்தனி browser-களின் எண்ணிக்கையை அறிய ஒரு random browser identifier சேமிக்கப்படுகிறது. Server-ல் அதன் hash மற்றும் வருகை தேதி மட்டுமே பதிவாகும்; இந்த visitor count-க்காக பெயர், phone number அல்லது IP address சேமிக்கப்படுவதில்லை.
Cart மற்றும் வரைபடம்
நீங்கள் தேர்வு செய்த பொருட்களை நினைவில் வைத்திருக்க உங்கள் browser-ல் cart விவரங்கள் சேமிக்கப்படுகின்றன. Contact page-ல் Google Map காட்டப்படும்போது Google சேவை இணைக்கப்படும்; அப்போது அதன் privacy விதிகள் பொருந்தும்.
தொடர்பு
உங்கள் ஆர்டர் தகவல்களில் திருத்தம் அல்லது தனிப்பட்ட விவரங்கள் குறித்த கோரிக்கைகளுக்கு கடையைத் தொடர்புகொள்ளுங்கள்.
Contact Us →